KNOW ABOUT

Who We Are?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம்!
1. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டின் (BACKWARD CLASS RESERVATION) முக்கியத்துவம்.

i) a. முன்னிலை அரசு கல்வி நிறுவனங்களில் (Anna University, IIT,IIM உட்பட்ட), அட்மிஷனில் முன்னுரிமை பெற, படிப்புக்கு அரசு உதவித்தொகை மற்றும் சலுகை பெற,
  b. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, அதன்பின் பதவி உயர்வில் முன்னுரிமை பெற,
  c. தொழில் துவங்குதல் மற்றும் தொழிற்கடன், இதரபல மத்திய – மாநில அரசு சார்ந்த செயல்பாடுகளில் முன்னுரிமை பெற – பிற்படுத்தப்பட்ட (BC) இட ஒதுக்கீடு மிக‌ மிக அவசியம்,
 d. மாணவராக இருந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணி புரிந்தாலும், அரசுப்பணியில் இருந்தாலும், தொழில் முனைவராக இருந்தாலும், அரசின் அனுமதிகள் – உதவிகள் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடைபெற முடியாது. அரசு என்பது அரசு அதிகாரிகள் தான். அந்த அரசுப் பணியில் பிற்படுத்தப்பட்டோர் வர முடியாத நிலை உருவாகி வருகிறது. இது தொடர்ந்தால் நம் சமூகம் – சந்ததிகள் மிகமிக அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

ii)  எந்தெந்த சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் (Backward Classes) பட்டியலில் உள்ளனர்? (i) கொங்கு வேளாளர் (ii) தேவர்‌ (அகமுடையார், கள்ளர் ஒருசில பகுதியிலுள்ள மறவர்) (iii) நாடார் (iv) ஒக்கலிகர் (v) முதலியார் (vi) ரெட்டியார் (viii) செட்டியார் [தேவாங்கர், 24மனை செட்டியார், வானிய செட்டியார்] (viii) யாதவர் (கோனார் அனைத்துப் பிரிவினர்). (ix) முத்துராஜா (x) வேளாளர் (சோழிய வேளாளர்……….) மற்றும் 133 சமூகத்தினர் (மொத்தம் 143 சமூகத்தினர்).

iii)  மிகப் பிற்படுத்தப்பட்டவர் (Most Backward Classes): அனைத்து வன்னிய சமூகத்தினர், மறவர், வேட்டுவ கவுண்டர், இசை வேளாளர் உட்பட 41 வகுப்பினர் (இப்பட்டியலில் உள்ள மேற்சொன்ன சமூகத்தினரைத்தவிர சுமார் 35 சமூகத்தினர் தமிழகத்தில் சொற்ப அளவிலேயே உள்ளனர்).

2. தற்போது [2020 – DECEMBER] மத்திய - மாநில அரசு பட்டியலில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இட ஒதுக்கீடு.
1.) மாநில அரசு:-
1.1) BC – பிற்படுத்தப்பட்டோர்26.5%
1.2) இஸ்லாமியர்3.5%
1.3) MBC – மிகப்பிற்படுத்தப்பட்டோர் (*)20%
1.4) SC and ST – பட்டியல் இனத்தவர்19%
1.5) Open Quota – பொதுப்பிரிவு31%

Note: இந்த MBC பிரிவினருக்கான 20% ஒதுக்கீடு கடந்த 26.02.2021 இல் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அவசர / சிறப்பு சட்டத்தின் மூலம் – மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
விவரம்: வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் என்ற தலைப்பின் கீழ் காண்க.

2.) மத்திய அரசு:-
2.1) OBC – மற்ற பிற்படுத்தப்பட்டோர்27% (முக்கிய குறிப்பு: இதில் Creamy Layerக்கு இட ஒதுக்கீடு இல்லை)
2.2) Minorities – சிறுபான்மையினர்4.5%
2.3) SC and ST – பட்டியல் இனத்தவர்22.5%
2.4) EWS – பொருளாதாரத்தில் பின்தங்கியோர்10%
2.5) Open Quota – பொதுப்பிரிவு36%
3. கடந்த 1990லிருந்து, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நம் சமூகத்தினரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகள், இழைக்கப்பட்ட அநீதிகள்.

a)  1990ம் வருடம் வரை இட ஒதுக்கீட்டில் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% என்று இருந்ததை, இந்த அரசியல் கூட்டம் கொடுத்த நிர்ப்பந்தத்தின் காரணமாக, இந்திய துணைக்கண்டத்தில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில், மிகப்பிற்படுத்தப்பட்டவர் [MBC] என்று ஒரு புது ஒதுக்கீட்டின் மூலம், வன்னியர் உட்பட்ட 40 சமூகத்தினருக்கு மட்டும் (இதில் பல சமூகத்தினர் மிகமிக சொற்பமே உள்ளனர் (20% இட ஒதுக்கீட்டு தந்து, இதன் பெரும் பயனை இரண்டு அல்லது மூன்று சமூகத்தினர் மட்டுமே அறுவடை செய்யும்படி செய்தனர்.

b)  கடந்த 40 வருடங்களாக அமைக்கப்பட்ட ஒரு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ( Backward class commission ) -ல் கூட, பிற்படுத்தப்பட்டோரை ஆணைய தலைவராக நியமிக்கவில்லை. எந்த சமூகத்தினர் நம் உரிமையை பறிக்க காரணமாக இருந்தார்களோ அவர்களைத்தான் தலைவராக நியமித்தனர். அவர்கள் உண்மைக்குப் புறம்பான – புனையப்பட்ட புள்ளிவிபரங்களை தந்து – நம் உரிமைகளை பறித்தும் வருகின்றனர்.

c)  மாநில அரசு மீண்டும், 2009 – 2010-ல், பிற்படுத்தப்பட்டோருக்கான 30% இட ஒதுக்கீட்டில், இஸ்லாமியர்களுக்கு 3.5% உள்ஒதுக்கீடு வழங்கி பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை 26.5% சதவீதமாக குறைத்தனர்.

d)  நம் மாநில அரசு இவ்வாறு பிற்படுத்தப்பட்டோரை வஞ்சிக்க, மத்திய அரசு தன் பங்குக்கு கிரீமிலேயர் – என்ற விதியைப் புகுத்தி , இதன்மூலம் பெரும்பாலான பிற்படுத்தப்பட்டோரை other Backwards Classes (OBC) சலுகை பெற முடியாமல் வஞ்சித்தது. இதில் கொடுமை என்னவென்றால் கிரீமிலேயர் என்ற விதி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும்..

e)  இது போதாதென்று – இட ஒதுக்கீடு பெறாத – அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (BC/OBC) (SC/ST) வகுப்பினர் அல்லாத சமுதாயத்தினருக்கு மட்டும் தனியாக, Economically weaker sections (EWS) – ஒதுக்கீடு 10% அறிவித்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த ஒரு ஒதுக்கீடும் – சலுகையும் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டது. தமிழ்நாட்டில் இச்சலுகை பெறக்கூடிய ஜனத்தொகையே சுமார் 8% சதவீதம் தான் என்பது வேதனைக்குரிய விஷயம்.

f)  ஆக மத்திய/மாநில அரசு வேலைவாய்ப்பு/கல்வி நிறுவனங்களை பொருத்தவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், General / open Quota – வில் தான் போட்டியிட வேண்டுமென்ற சூழ்நிலை இருந்து வருகிறது.

g)  நம் மாநிலத்தில் தங்களுக்கென (எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில்) MBC – இட ஒதுக்கீடு பெற்ற சமூகத்தினரில், மிக அதிகமாக பயன் அடைந்தவர்கள் – இன்று போராட்டங்களில் ஈடுபடும் ஒரு சமூகத்தினர், தங்களின் திட்டமிட்ட அரசியல் – அதிகார செல்வாக்கின் மூலம் கடந்த 30 வருடத்தில், அரசுப் பணிகளிலும் – தொழிற்கல்வியிலும் இன்று சுமார் 30% சதவீதத்திற்கு மேல் உள்ளனர். இச்சமூகத்தினர் பொது ஒதுக்கீட்டிலும் போட்டியிட்டு அரசுப்பணி மற்றும் கல்வி அட்மிஷன்கள் பெறுகின்றனர்.

h)  ஆனால், பிற்படுத்தப்பட்டவர்கள் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் எந்தவிதமான உண்மையான, பயனுள்ள, சலுகையையும் பெற முடிவதில்லை. இட ஒதுக்கீட்டின் உண்மையான பயனை – சமூக நீதியை நாம் பெறுவதை பறித்து, மாநிலத்திலும் – மத்தியிலும் நமது அனைத்து வாய்ப்புகயையும் தொடர்ந்து அழித்துக்கொண்டுள்ளனர்.

i)  இந்நிலையில் உண்மையான ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து – முடிவு செய்ய, அரசியல் சாராத – “பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு” (Society for the Rights of – Backward Classes) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த உள்ளோம். இவ்வமைப்பானது முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பிற்கு மட்டுமே. இது அரசியல் – தேர்தல்களில் எவ்விதத்திலும் பங்கேற்காது.

Scroll to Top