ஒன்றிய அரசின் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் தமிழ்நாடு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

ஐஐடி (IIT -Indian Institutes of Technology), ஐஐஎம்  (IIM -Indian Institutes of Management),  ஐஐஐடி  (IIIT – Indian Institutes of Information Technology), என்ஐடி (NIT -National Institutes of Technology) மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து கல்வி கட்டண ரசீதுகளுடன் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இன மாணவ/மாணவியர்களின் விண்ணப்பத்தினை உரிய பரிந்துரையுடன் முகவரிக்கு பிற்படுத்தப்பட்டோர் தனியாகவும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் தனியாகவும் அனுப்பவும்.

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்

மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம்

முகவரி:
ஆணையர், பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை-5

மேலும் விவரங்களுக்கு:
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகங்களை அணுகவும்.

தகுதிகள்:

  • தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2.50 இலட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
  • படிப்பிற்கான காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.
  • கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு குறைவாக வழங்கப்படும்.
  • 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Scroll to Top